தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் இரட்டைக்கொலை வழக்கில் 4 பேர் மத்தியசிறையில் அடைப்பு

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்களான அண்ணன், தம்பி இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில்

News image
Updated On :4 செப்டம்பர் 2014, 3:46 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்களான அண்ணன், தம்பி இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரிடம் சரண் அடைந்த நான்கு பேரை புதன்கிழமை இரவு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேடு பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களான ஆம்புலன்ஸ் குமார் (34), இவரது தம்பி ராஜேஷ் (32) ஆகிய இருவரையும் கட்த செப்.2-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மூடிக்கொண்டு வந்த மர்மகும்பல் ஒன்று  வெடிகுண்டு வீசி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, இருவரது தலையை மட்டும் எடுத்துக்கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு வைத்துவிட்டு தலைமறைவாகினர். மருத்துவமனை முன்பு வெடிகுண்டு வீசியதில் அங்குள்ள கடை மற்றும் கார் ஒன்று கண்ணாடிகள் உடைந்து சேதமுற்றது. இச்சம்பவத்தில் 6 பேர் படுகாயமுற்ற ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வழக்கில் இவ்வழக்கில் அண்ணாமலைநகர் தெற்கிருப்பு சிவன்கோயில் தெருவைச் சேர்ந்த பட்டாபிராமன் (28), இவரது அண்ணன் மணிகண்டன் (30), சிவன்கோயில் தெருவைச் பத்தாயிரம் என்கிற வெங்கடேசன் (29), அண்ணாமலைநகர் மண்ரோட்டைச் சேர்ந்த கஜேந்திரன் (28) ஆகிய 4 பேர் போலீஸாரிடம் சரணடைந்தனர். சரணடைந்த நான்கு பேரிடமும் விசாரணை நடத்திய போலீஸார் புதன்கிழமை இரவு சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையிலடைத்தனர்.

புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பு: நீதிமன்றத்திற்கு குற்றம்சாட்டபவர்களை நான்கு பேரை அழைத்து வந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அவர்களை படம் எடுக்க அனுமதி மறுத்து, வாகனத்தை நீதிபதி வீட்டருகே அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் போலீஸாரிடம் வலியுறுத்திய போது உச்சநீதிமன்றம் புகைப்படம் எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். அப்போது செய்தியாளர்கள் குற்றம்சாட்டப்பவர்களை கைது செய்யும் போது போலீஸார் நீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்காதபோது, இது எப்படி சாத்தியமாகும் எனக்கேட்டனர். இதனையடுத்து குற்றம்சாட்டப்பவர்கள் நான்கு பேரையும் முகத்தைமூடி புகைப்படம் எடுக்க அனுமதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.