காங்கிரஸிடம் ஆதரவு கோரிய நெல்லை பாஜக மேயர் வேட்பாளர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜி.பி.ஆர். வெள்ளையம்மாள், காங்கிரஸ் கட்சியினரிடம் ஆதரவு திரட்டியது அரசியல்


திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜி.பி.ஆர். வெள்ளையம்மாள், காங்கிரஸ் கட்சியினரிடம் ஆதரவு திரட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக-வை எதிர்த்து பாஜக போட்டியிடுகிறது. பாஜக சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி நகரில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்துக்கு தனது கட்சியினருடன் வெள்ளிக்கிழமை வந்திருந்தார். வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திரும்பும்போது, எதிரே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக வந்தனர்.
அப்போது, அவர்களை சந்தித்த பாஜக மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் தங்களுக்கு ஆதரவு அளிக்கக் கோரினார். திருநெல்வேலி மேயர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. எனவே, அதிமுக-வை எதிர்த்து பாஜக-வுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரினார். ஆனால், முன்னாள் மத்திய அமைச்சரோ, ஆதரவு குறித்து எதுவும் கூறாமல் பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்து விடைபெற்றார். பாஜக, காங்கிரஸ் கட்சியினர் எதிரும், புதிருமாக செயல்பட்டு வரும் சூழலில் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினரிடம் பாஜக வேட்பாளர் ஆதரவு கேட்டது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...