தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

சிதம்பரம் ஸ்ரீகாயத்ரி தேவி கோயில் பெளர்ணமி உத்ஸவம் தொடக்கம்

மந்திரங்களுக்கெல்லாம் அதிதேவதையான ஸ்ரீகாயத்திரிதேவிக்கு சிதம்பரத்தில் தனிக்கோயில் அமைந்துள்ளது. கடுமையான தோஷங்களினால் பீடிக்கப்பட்ட மன்னன் ஒருவன், இப்பகுதிக்கு

News image
Updated On :7 செப்டம்பர் 2014, 1:19 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீகாயத்திரி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவேதமாதா காயத்திரி தேவி கோயிலில் ச்ராவண பெளர்ணமி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மந்திரங்களுக்கெல்லாம் அதிதேவதையான ஸ்ரீகாயத்திரிதேவிக்கு சிதம்பரத்தில் தனிக்கோயில் அமைந்துள்ளது. கடுமையான தோஷங்களினால் பீடிக்கப்பட்ட மன்னன் ஒருவன், இப்பகுதிக்கு வந்தபோது தினமும் காயத்திரி ஜபம் செய்யும் வேதியர் ஒருவர் அவனுடைய தோஷங்கள் நீங்க, தான் பெற்ற ஜப பலன்களை தாரை வார்த்ததாகவும், தோஷம் நீங்கிய மன்ன் காயத்திரி தேவிக்கு இங்கு தனிக்கோயில் கட்டியதாகவும் வரலாறு கூறுகிறது. கோயில் மூலஸ்தானத்தில் அன்னை காயத்திரிதேவி தாமரை மலரில் கொலு வீற்றிருக்கிறாள். அன்னையின் பாதத்தின் அருகே ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆலயத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், காலை காயத்திரி தேவியாகவும், மதியம் சாவித்திரியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சியளிப்பதாக ஐதீகம் உள்ளது.

இச்சிறப்பு வாய்ந்த ஸ்ரீகாயத்திரி தேவி கோயிலில் ச்ராவண பெளர்ணி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை உத்ஸவ தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை காயத்திரி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், செவ்வாய்க்கிழமை பெளர்ணமி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. மூன்று நாட்களும் ஸ்ரீகாயத்திரி தேவி வீதி உலா நிகழ்ச்சியும், வேதபாராயண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி (பூஜை) எஸ்.ராஜசேகர தீட்சிதர் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.