47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு

கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. ஆண்டுப்

News image
Updated On :8 செப்டம்பர் 2014, 12:47 pm

சங்கர்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா, திருக்கொடி இறக்கத்துடன் திங்கள்கிழமை மாலை நிறைவடைந்தது.

கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. ஆண்டுப் பெருவிழா நவநாள் திருவழிபாடாக தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், கொங்கணி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மாலை நேர நிகழ்வாக தினமும், ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் செபம், மறையுரை, திவ்யநற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான அலங்காரத் தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

அன்னையின் பிறந்த நாள்:

ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.மாதாவின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. ஆண்டுப் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், பேராலயக் கீழ்க்கோயிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர் மற்றும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.