பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வகுப்புவாத கலவரங்களை மோடி தடுத்து நிறுத்தவில்லை: பிரகாஷ் காரத்

 நாட்டில் ஏற்பட்டு வரும் வகுப்புவாத கலவரங்களை மோடி தடுத்து நிறுத்தவில்லை என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.

News image
Updated On :26 செப்டம்பர் 2014, 1:49 pm

இன்பராஜ்

 நாட்டில் ஏற்பட்டு வரும் வகுப்புவாத கலவரங்களை மோடி தடுத்து நிறுத்தவில்லை என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.

 தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

 கடந்த நான்கு மாத கால பாஜக ஆட்சியில் விலைவாசி மற்றும் டீசல் விலை எந்தவிதத்திலும் குறையவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது அவர்கள் விலைவாசியை குறைத்துவிடுவோம் என வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரை அவ்வாறு எதுவும் செய்யவில்லை.

 இதேபோல, உத்தரப்பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் வகுப்புவாத கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. இதனால், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பலனடைகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் உள்ளார். இதனை தடுத்து நிறுத்தாமல் உள்ள அவர் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இந்திய- சீன எல்லைப் பிரச்னையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவை எடுக்க வேண்டும். கடந்த 1988 ஆம் ஆண்டு முதலே இருநாட்டு தலைவர்களும் அடிக்கடி பரஸ்பரம் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் நாம் எந்தவொரு வெளிநாட்டையும் எதிர்ப்பார்த்து காத்திருக்க வேண்டியது இல்லை.  தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது பற்றி நாங்கள் இப்போது சிந்திக்கவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருக்கிறது. தற்போதுவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.

 தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்களிலேயே நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அதிக உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.