விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் அறிவிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- 2007-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அரசியல், சமூகம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், பெண்ணுரிமை, கல்வி மேம்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகள் போன்றவற்றிற்காகப் பணியாற்றுவோருக்காக இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. ரூ.50 ஆயிரத்துடன், பாராட்டுப் பத்திரமும் கொண்டதாகும் இந்த விருது.
2015-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது எழுத்தாளர் அருந்ததிராய்க்கும், அயோத்திதாசர் விருது பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கும், பெரியார் விருது கோவை கு.ராமகிருஷ்ணனுக்கும், காமராஜர் விருது மறைந்த ஜி.கே.மூப்பனாருக்கும், காயிதேமில்லத் விருது ஜவாஹிருல்லாவுக்கும், செம்மொழிஞாயிறு விருது அவ்வை நடராசனுக்கும் வழங்கப்படும்
விருதுகள் வழங்கும் விழா வரும் சென்னையில் மே 2-ஆம் தேதி நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...