அம்பத்தூரில் கழுத்தை நெரித்து பெண் கொலை: வாடகைக்கு வீடு பார்க்க வந்தவரின் வெறிசெயல்
சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பிரகாஷ் நகர் பாண்டியந் தெருவைச்சேர்ந்தவர் குருநாதன் சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.இவரது மனைவி நிர்மலா(65).இவர்களது


சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பிரகாஷ் நகர் பாண்டியந் தெருவைச்சேர்ந்தவர் குருநாதன் சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.இவரது மனைவி நிர்மலா(65).இவர்களது வீட்டின் மாடியில் வீடு காலியாக இருக்கிறது.
செவ்வாய்கிழமை மதியம் 2 மணியளவில் கணவனும்,மனைவியும் வீட்டில் தனியாக இருந்த போது, சுமார் 30 வயது மதிக்கதகக மர்ம ஆசாமி ஒருவன் வந்து, வீடு பார்க்க வந்ததாக கூறினான். இதனை உண்மை என்று நம்பிய குருநாதன், மனைவி நிர்மலாவிடம் வீட்டை திறந்து காட்ட சொன்னார். மர்மஆசாமி முதல்மாடிக்கு அழைத்துச்சென்றதும், நிர்மலாவை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு,அவர் அணிந்திருந்த 9 சவரன் தங்கநகையை பறித்துக் கொண்டு, யாதும் அறியாதது போல் தப்பிச்சென்றான்.
இதனிடையே வெளியில் சென்றிருந்த நிர்மலாவின் மகன் திரும்பி வந்தவுடன், மாடிக்கு சென்று பார்த்தபோது, நிர்மலா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அம்பத்தூர் காவல்த்துறையினர் வழக்கு பதிவுசெய்து மர்மஆசாமியை தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...