கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில்  இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது

விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் விவாசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2015, 3:37 pm

சி. உதயகுமார்

விராலிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் விவாசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விராலிமலையில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் மாலை 7 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் இருட்ட தொடங்கியதுடன் பலத்த காற்று வீசத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில நாட்களாக பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மற்றும் விவாசாயிகள்  மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.