ஈழத்தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்: கருணாநிதி
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்பதன் மூலம், ஈழத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்பதன் மூலம், ஈழத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துக் கூறியுள்ளார்.கருணாநிதி: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டணி 14 இடங்களிலும் வெற்றி பெற்று, மூன்றாவது பெரும் கட்சிக்குரிய இடத்தைப் பெற்றிருப்பது முக்கியமானதொரு திருப்பமாகும்.
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு திமுக சார்பில் வாழ்த்துகள் தற்போது அதிபராக உள்ள சிறீசேனா அறிவித்த 20-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, அதிபர் ஆட்சி முறையில் இருந்து மாறி, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் திரும்பும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றி, புதிய பிரதமர் எடுக்கும் முடிவுகளை வடிவமைத்திடக் கூடிய நிலையில் அமைந்துள்ளதால், ஈழத் தமிழர்களின் நெடுங்காலப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுத்துச் செல்வதற்கான நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது என நம்பலாம்.
எனவே, இந்தச் சூழலில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குச் சம உரிமைகளுடன் கூடிய கண்ணியமான அமைதியான நல்வாழ்வு அமைந்திட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறத்தக்க அளவுக்கு ஆக்கப்பூர்வ முடிவுகள் எடுக்கப்பட்டு, புதிய விடியலுக்கு வழி ஏற்படும்.
ஜி.கே.வாசன்: இலங்கை தேர்தலில் ராஜபட்சே தோல்வி அடைந்திருப்பது தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களுக்கு ராஜபட்ச விளைவித்த அநீதியின் காரணமாகவே அவருக்குத் தோல்வி ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாறு செயல்படுவார் என்று நம்புகிறோம். மீனவர்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் வெற்றிபெற்றுள்ளோருக்கும் வாழ்த்துகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...