திருச்சி - பினாங்க் இடையே செப்.26-ல் நேரடி விமானப் போக்குவரத்து தொடக்கம்
திருச்சி மற்றும் மலேசிய மாநிலப்பகுதிகளில் ஒன்றான பினாங்க் இடையே புதிய விமானப்போக்கு வரத்தை மலிண்டோ ஏர்வேஸ் விமான நிறுவனம் வரும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.


திருச்சி மற்றும் மலேசிய மாநிலப்பகுதிகளில் ஒன்றான பினாங்க் இடையே புதிய விமானப்போக்கு வரத்தை மலிண்டோ ஏர்வேஸ் விமான நிறுவனம் வரும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியது முதல் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ற வகையில் உலக நாடுகளைச் சேர்ந்த புதிய விமான நிறுவனங்கள் பல போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டு வந்தாலும், ஏற்கெனவே இயங்கி வரும் விமான நிறுவனங்கள் கூடுதல் சேவையை அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் திருச்சி-மலேசியா இடையே இயக்கப்பட்டு வரும் மலிண்டோ, ஏர்-ஏசியா மற்றும் சிங்கப்பூர்-திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் டைகர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சேவைகளை படிப்படியாக அதிகரித்துள்ளன. அந்தவகையில் மலிண்டோ ஏர்லைன்ஸ் வாரத்துக்கு 12 சேவைகளையும், ஏர் ஏசியா வாரத்துக்கு 7 ஆக இருந்ததை பின்னர் படிப்படையாக அதிகரித்து தற்போது 21 சேவைகளையும் இயக்கி வருகின்றன.
பயணிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தற்போது மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் திருச்சிக்கும் மலேசியாவிóல் பினாங்க் பகுதிக்கும் இடையை புதிய விமான போக்குவரத்தை செப்டம்பர் 26-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இது குறித்து மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு தலைமை செயல் அதிகாரி சுரேஷ்வண்ணன் (மலேசியா) கூறுகையில்,
பினாங்க் மலேசியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்று. தீவுப்பகுதியான இங்கு இந்தியவின் வேறு எந்தப்பகுதியிலிருந்தும் நேரடி விமான போக்குவரத்து கிடையாது. ஆனால் மலேசிய தலைநகரிலிருந்து கோலாலம்பூர் வழியாக தமிழகம் வரும் விமானப் பயணிகளில் சுமார் 20 சதவிகிதத்தினர் பினாங்க் பகுதியிலிருந்து பயணிக்கின்றனர். எனவேதான் இதனைக் கருத்தில் கொண்டு பினாங்க்-திருச்சி-பினாங்க் இடையை பிரத்யேக விமானப் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
வரும் செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கும் இந்தப் போக்குவரத்து பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல் கட்டமாக வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இந்த புதிய போக்கு வரத்து நடைபெறும். இரவு 9.40-க்கு திருச்சி வரும் இந்த விமானம் 10.30-க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு செல்லும். வரவேற்பைப் பொறுத்து போக்குவரத்தின் எண்ணிóக்கை அதிகரிக்கப்படும்.
இந்தியாவில் வேறு எந்த பகுதியிலிருந்தும் பினாஙகுக்கு நேரடிப்போக்கு வரத்து கிடையாது. திருச்சியிலிருந்து மட்டுமே இயக்கப்படுகின்றது. மேலும் வாரத்துக்கு 12 முறைகள் இயக்கி வரப்பட்ட மலேசியா-திருச்சி-மலேசியா போக்குவரத்தும் திங்கள் கிழமை (ஆக.24) முதல் 14 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருச்சி உள்ளிட்ட இந்தியாவின் மேலும் பல நகரங்களிலிருந்தும் புதிய மார்கத்தில் விமானப்போக்குவரத்தை மலிண்டோ தொடங்கவும் திட்டமிட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...