ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உலகில் 400 மில்லியன் பள்ளிக் குழந்தைகளுக்கு குடல் புழு தாக்குதல்

உலகளவில் 400 மில்லியன் பள்ளிக் குழந்தைகள் கொக்கிப்புழு, நாடபுழு தாக்குதலால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி, அவர்களின் பள்ளிப் பருவக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று அனைவருக்கும் கல்வி இயக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மாடசாமி கூறினார்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2015, 8:34 am

கோ.ஜெயக்குமார்

உலகளவில் 400 மில்லியன் பள்ளிக் குழந்தைகள் கொக்கிப்புழு, நாடபுழு தாக்குதலால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி, அவர்களின் பள்ளிப் பருவக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று அனைவருக்கும் கல்வி இயக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மாடசாமி கூறினார்.

சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட 11 குறுவளமையங்களில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான பள்ளிச் சுகாதாரம் மற்றும் உடல் நலக் கல்வி குறித்த ஒரு நாள் பயிற்சியைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒரு மனிதன் உடலை நலமாகவும், மனத்தை மகிழ்ச்சியாகவும் வைத்து நலமாக வாழ்வதே வாழ்க்கை வெற்றிக்கு அடையாளமாகும். இது குறித்த விழிப்புணர்வு இன்மையால் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படுகிறது. சுகாதாரக்கேடான சூழல் குழந்தைகளின் உடல்நலனை பாதித்து அவர்களின் ஆரம்பக் கல்வி அடைவை பாதிக்கின்றது.

பள்ளி சூழல், குழந்தைகளின் நலவாழ்வில் குறிப்பிடும்படியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே தொடக்க, நடுலைப் பள்ளிகளில் நல்ல சூழலையும், அங்கு பயிலும் மாணவர்களிடம் நலவாழ்வு குறித்த விழிப்பணர்வையும் முன்னிறுத்தி பள்ளி சுகாதார செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

சுகாதாரம் என்பது பள்ளிகளில் தொடங்கி சமுதாயத்திலும் தொடர வேண்டும் என்பதே கல்வித் துறையின் குறிக்கோள். குடிநீரை பராமரித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல் குறித்து மாணவர்கள், தங்களின் பெற்றோர்களிடம் எடுத்துரைக்கும்போது, நலவாழ்வு செய்திகள் எளிதாய் சமூகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆசிரியர்கள் இதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் எடுத்துக் கொண்ட பயற்சியை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.

11 குறுவளமையங்களில் நடைபெற்ற இப் பயிற்சியில் 391 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளர்களாக தலைமை ஆசிரியை ந.ரெங்கலதா, ஆசிரியப் பயிற்றுநர்கள் சுந்தேரேஸ்வரி, கணேஷ்வரி, செல்வராணி, கற்பகம், மீனலோஷினி, பழனிச்சாமி, மருதக்காளை, தர்மர், ஜூடு அமலன் ஆகியோர் செயல்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.