பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மலப்பாற்றில் தண்ணீர் வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

திருகோவிலூர் தென்பண்ணை ஆற்றிலிருந்து விழுப்புரம் அருகே உள்ள எல்லீஸ் அணையின் மலப்பாற்றிற்கு தண்ணீர் வந்தடைந்தது.

News image
Updated On :4 டிசம்பர் 2015, 7:11 am

சீனிவாசன்

திருகோவிலூர் தென்பண்ணை ஆற்றிலிருந்து விழுப்புரம் அருகே உள்ள எல்லீஸ் அணையின் மலப்பாற்றிற்கு தண்ணீர் வந்தடைந்தது.

சுமார் 200 அடி மணல்பாங்கான இடம் மலப்பாறு. இவை சுமார் 40 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின்போது அடித்து வரப்பட்ட மணல்களால் மணல்மேடுகளாகப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஆற்றில் நீர்வரத்து குறையத் தொடங்கி திருக்கடையூர், மனப்பாக்கம், புரையூர், எனதிரிமங்கலம் உள்ளிட்ட சுமார் 70 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்படைந்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக கிராமமக்கள், சமூக ஆர்வலர்கள் பெரும் முயற்சி எடுத்து தூர்வாரும் பணியில் ஈடுபடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அண்மையில் பெய்து வரும் கனமழையால் அணைகள் திறக்கப்பட்டத்தில் தென்பண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலப்பாற்றில் சுமார் 40 கிலோ மீட்டர் கடந்து இன்று காலை உரையூர் கிராமம் வந்தடைந்தது தண்ணீர். இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.