கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நிவாரண உதவிகள்
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெய்வேலி என்.எல்.சி வட்டம் 21, 30 பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம்....


அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெய்வேலி என்.எல்.சி வட்டம் 21, 30 பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம், உணவுபொருள், பாய் உள்ளிட்ட 15 பொருட்கள் அடங்கிய நிவாரணம் அடங்கிய பைகளை அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை செயலர் ஆர். சின்னசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.
இவருடன், எம்.எல்.ஏ, அமைச்சர்கள் எம்.சி சம்பத், ஆர்.பி உதயகுமார், எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் இரா. ராஜேந்திரன் (குறிஞ்சிப்பாடி), எம்.பி.எஸ் சிவசுப்பிரமணியன் (நெய்வேலி), அண்ணா தொழிற்சங்க பேரவை பொதுசெயலர் இராம உதயகுமார், தலைவர் அபு, பொருளர் தேவானந்தன், அலுவலக செயலர் அல்போன்ஸ், நகர செயலர் கோவிந்தராஜ், அவைத்தலைவர் வெற்றிவேல், பொருளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதே போன்று குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வரகுத்தூர் அருகேயுள்ள கீழுர் காலனியில் வசிக்கும் பெரிய கோயில் குப்பம் வேகாகொள்ளை கிராமத்தைச் சேர்ந்த 600 பேருக்கு சுமார் 7 அரை டன் அளவுள்ள நிவாரண பொருள்களை பொள்ளாசியைச் சேர்ந்த சத்தீஸ் குழுமம் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ குழுவினர் வழங்கினர். ஓ.பி.ஆர் கல்வி நிறுவன செயலர் செல்வராஜ், தலைமை சங்கர் ஆகியோருடன் பஞ்சாயத்து தலைவர் கௌன்சிளர் சுரேஷ் குமார் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...