மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் : விஜயபாரத மக்கள் கட்சி கோரிக்கை

ராணிப்பேட்டை சம்பவத்திற்கு காரணமாத வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்க செய்ய வேண்டுமென விஜயபாரத

Updated On :4 பிப்ரவரி 2015, 11:43 am

ராணிப்பேட்டை சம்பவத்திற்கு காரணமாத வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்க செய்ய வேண்டுமென விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : ராணிப்பேட்டையிóல தோல் தொழிற்சாலை பொது சுத்திகரிப்பு நிலைய கழிவு சேகரிப்பு தொட்டி உடைந்து அருகில் உள்ள தொழிற்சாலையில் தூங்கிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் வேதனைக்குரியது. 

இதுவரை தோல் தொழிற்சாலை கழிவுநீரில் சிக்கியும், விஷவாயு தாக்கியும் சுமார் 50 பேர் இறந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. மேலும் தோல் கழிவால் மாசுக்கேடு சம்பந்தமாக விவசாயிகள் சார்பாக உச்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தொழிற்சாலைகள் அனைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக பராமரிப்பதாகவும், தோல் தொழிற்சாலை கழிவுநீரை முழுமையாக சுத்தம் செய்வதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது வேதனைக்குரியதாகும்.

மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் தான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது.  அதனால் வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.  மேலும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.