பழனியில் நாளை தெப்பத்தேர் உலா: மலைக்கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு
பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தெப்பத்தேர் உலாவும், இரவு திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மலைக்கோயிலில் தங்கத்தேர்


பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தெப்பத்தேர் உலாவும், இரவு திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது. நான்கு நாட்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மலைக்கோயிலில் தங்கத்தேர் புறப்பாடும் நடைபெறவுள்ளது.
பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டமும், செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருத்தேரோட்டமும் நடைபெற்றது. விழா நாட்களில் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி தங்கக்குதிரை, வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளியானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார். ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயிலில் தம்பதி சமேதர் சுவாமிக்கு சோடஷ அபிஷேகம், சோடஷ உபச்சாரம் நடத்தப்பட்டது. பின்னர் துறையூர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருள தங்கமயில் வாகனத்தில் ஏற்றம் செய்யப்பட்டார். மஹாதீபாராதனையைத் தொடர்ந்து சுவாமி நான்கு இரதவீதி உலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பத்தேரில் சுவாமி உலா எழுந்தருள்கிறார். இரவு கோயிலில் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெறவுள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தினமும் நடைபெற்று வந்த தங்கத்தேர் புறப்பாடு கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் புறப்பாடு செய்வதற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
விழா நிறைவுபெறவுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை முதல் மலைக்கோயிலில் தொடர்ந்து தினமும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...