பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

காதலர் தின வாழ்த்து அட்டை கிழிப்பு போராட்டம்

பழனி பேருந்து நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் காதலர் தின அட்டை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :13 பிப்ரவரி 2015, 2:44 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி பேருந்து நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் காதலர் தின அட்டை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை இந்து மக்கள் கட்சி சார்பில் காதலர் தின வாழ்த்து அட்டை கிழிப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதைத் தொடர்ந்து பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஏராளமான போலீஸார் காத்திருந்தனர்.  ஆனால் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம்பிரபு தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திக், நகர அமைப்பாளர் ஆனந்தன்,  மாவட்ட தலைவர் சிவக்குமார் ,  மாவட்ட துணைத் தலைவர் மோகன், மாவட்ட செயலாளர் ரமேஷ் என பதினைந்துக்கு் மேற்பட்டோர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே திடீரென குவிந்து காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து விட்டு, காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.  ரவுண்டானா பகுதியில் காத்திருந்த போலீஸார் சம்பவமறிந்து நுழைவாயில் அருகே வருமுன் அனைவரும் கலைந்து சென்றுவிட்டதால் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.