47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் சீ.வளர்மதி 4022  வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பஞ்சப்பூர் சாரநாதன் கல்லூரியில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையப் பணிகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

News image
Updated On :16 பிப்ரவரி 2015, 5:31 am

சங்கர்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பஞ்சப்பூர் சாரநாதன் கல்லூரியில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மையப் பணிகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

வாக்கு எண்ணிக்கை நடக்கும் அறையைச் சுற்றிலும் 4 அடுக்குப் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முகவர்கள் நேரடியாகக் கண்காணிக்கும் வகையிலான கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேசைக்கும் ஒரு நுண்பார்வையாளர், ஒரு வாக்கு எண்ணிக்கை அலுவலர், ஒரு உதவியாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து தலா 20 நிமிஷங்களுக்கு ஒரு முறை சுற்றுகளின் முடிவுகள் வெளியாகும் எனவும் பிற்பகல் சுமார் 2 மணிக்கு இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடந்து முடிந்துள்ள முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில்  அதிமுக- 6232, திமுக- 2010, பா.ஜ., - 140, மார்க்சிஸ்ட் - 20 வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுக வேட்பாளர் சீ.வளர்மதி 4022  வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.