தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவல்கிணறில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் சாவு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வியாழக்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் இறந்தனர்.

News image
Updated On :20 பிப்ரவரி 2015, 2:36 am

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வியாழக்கிழமை இரவு பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் இறந்தனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் சொகுசு பேருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்டது. பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களது சடலம் பேருந்தின் உதிரிபாகங்களுக்குள் சிக்கியதால் உடனடியாக மீட்கமுடியவில்லை. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் பணகுடி போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.