புதுக்கோட்டையில் இன்று அதிகாலை நேர்ந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து பற்றிய விவரம் வருமாறு :
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கரகராட்டம், கச்சேரி என வெகு விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
கரம்பக்குடி அருகே உள்ள காத்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (22) மற்றும் அவர் நண்பர்கள் ஜோதிபாபு, பாண்டியன் ஆகியோர், கோயில் திருவிழாவைப் பார்த்துவிட்டு இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். புதுக்கோட்டை கிழக்கு ராஜ வீதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.
இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

