சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாளை தேரோட்டம்!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நாளை ஜன.4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நாளை ஜன.4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற ஜன.27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜன.3-ம் தேதி சனிக்கிழமை தங்கரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுங்குதிரை வாகன வீதிஉலா நடைபெற்றது. நாளை ஜன.4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தர் அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வருகின்றனர். பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
ஜன.5-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜன.6-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...