பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பழனியில் கட்டிட பொறியாளர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்

பழனி தலைமை தபால் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது சிமெண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி பழனி கட்டிட பொறியாளர் சங்க

News image
Updated On :6 ஜனவரி 2015, 12:31 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் சிமெண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர்கள், கட்டிட பணியாளர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

பழனி தலைமை தபால் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது சிமெண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி பழனி கட்டிட பொறியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சரவணக்குமார், பொறியாளர் சிராஜ்நிஷா உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.  அப்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மூட்டை சிமெண்ட் விலை ஒரே நாளில் ரூ.80 உயர்த்தப்பட்டதால் தற்போது ரூபாய் 390க்கு விற்கப்படுகிறது.  அண்டை மாநிலங்களில் ரூபாய் 250க்கு விற்கப்படும் போது தமிழகத்தில் சிமெண்ட் விலை உயர்வால் பொதுமக்கள் மட்டுமன்றி அரசு கட்டிட பணிகளும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து பேசப்பட்டாலும் மத்திய, மாநில அரசுகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததால் பணிகளே இல்லாத நிலையில் தற்போது விலை ஏற்றத்தால் பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கட்டிட பொறியாளர்கள் மட்டுமன்றி கட்டிடப் பணியாளர்கள், சார்பு தொழில் புரிவோர் என பலரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.