92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுருண்டு விழுந்து முதியவர் சாவு

சிதம்பரம் குமரன்தெருவைச் சேர்ந்தவர் அழகுரத்தினம் (64). பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வரும் இவரது மனைவி பெயர் வளர்மதி. 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் புதன்கிழமை

News image
Updated On :7 ஜனவரி 2015, 1:24 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய வந்த முதியவர் மயங்கி கீழே விழுந்து மரணமடைந்தார்.

சிதம்பரம் குமரன்தெருவைச் சேர்ந்தவர் அழகுரத்தினம் (64). பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வரும் இவரது மனைவி பெயர் வளர்மதி. 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் புதன்கிழமை காலை சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனைவியுடன் ஆதார் அட்டை பதிவு செய்ய வந்துள்ளார். அப்போது அலுவலக நுழைவுவாயில் அருகே மயங்கி கீழே விழுந்து இறந்து போனார். மாரடைப்பால் இறந்ததாக போலீஸார் தெரிவித்தார். இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.