சிதம்பரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
சிதம்பரம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மணிவண்ணன். சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள வி.ஐ.பி நகரில் வசித்து வரும் இவரது மனைவி


சிதம்பரத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீட்டு பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
சிதம்பரம் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மணிவண்ணன். சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள வி.ஐ.பி நகரில் வசித்து வரும் இவரது மனைவி பெயர் சந்திரா (48). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். துபாயிலிருந்து வந்துள்ள மகளுடன் சந்திரா புதன்கிழமை மாலை வீட்டை பூட்டிக்கொண்டு சிதம்பரம் நகரில் உள்ள கடைத்தெருவிற்கு வந்து பொருள்கள் வாங்கிக் கொண்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து, 10 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சந்திரா சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...