92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாளை சென்னையில் நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினரின் தர்ணா போராட்டம்

நியாயவிலைக் கடை திட்டப்பணிகள் அனைத்தும் நூறு சதவீத கணினி மயமாக்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க

News image
Updated On :8 ஜனவரி 2015, 2:46 pm

ஜி.சுந்தரராஜன்

நியாயவிலைக் கடைகளுக்கு மூடுவிழா, மத்திய அரசு உணவுப் பொருள்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தினை கைவிடக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நாளை (ஜன.9) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஜெயசந்திரராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடையே தெரிவித்தது:

நியாயவிலைக் கடை திட்டப்பணிகள் அனைத்தும் நூறு சதவீத கணினி மயமாக்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், அரிசி உள்ளிட்ட கட்டுப்பாட்டு பொருள்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும், போலி குடும்ப அட்டைகளை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை தமிழகஅரசுக்கு முன்வைத்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஜன.9-ம் தேதி வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டம் நடத்தவுள்ளோம். போராட்டத்தில் அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளன பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் வரவேற்கிறார். மாநிலத் போராட்டத்தில் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, கடலூர் மாவட்டங்களில் இருந்து நியாய விலைக்கடை பணியாளர்கள் பங்கேற்கின்றனர் என ஜி.ஜெயசந்திரராஜா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.