பழனி-பொள்ளாச்சி அகலரயில் பாதையில் சிறப்பு ரயில்கள் இயக்கம்
பொள்ளாச்சியில் இருந்து பழனி வரையிலான அகலரயில் பாதையில் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு தலைமையில் பொதுமக்கள், கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


பொள்ளாச்சியில் இருந்து பழனி வரையிலான அகலரயில் பாதையில் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு தலைமையில் பொதுமக்கள், கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி-பாலக்காடு வரையிலான மீட்டர்கேஜ் பாதை கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு அகலரயில் பாதைக்கான பணிக்காக மேற்கொள்ளப்பட்டது. இதில் திண்டுக்கல் முதல் பழனி வரையிலான அகலரயில் பாதை பணிகள் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு தற்போது பழனியில் இருந்து சென்னை, திருச்செந்தூர், திண்டுக்கல், மதுரைக்கு இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான அகலரயில்பாதை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் உயர்அதிகாரிகள் ஆய்வு செய்து ரயிலை இயக்க அனுமதி அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று முதல் சிறப்பு ரயில்கள் பழனியில் இருந்து பொள்ளாச்சிக்கு தென்னக ரயில்வே இயக்க துவங்கியுள்ளது. இன்று காலை 6.15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி பழனிக்கு 7.50க்கு வந்த ரயிலுக்கு பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு தலைமையிலான கட்சியினரும், பொதுமக்களும் சிறப்பு வரவேற்பு வழங்கினர்.
பழனியில் இருந்து பொள்ளாச்சி வரையிலான தூரம் 65 கி.மீ ஆகும். இப்பாதையில் பழனியில் இருந்து பொள்ளாச்சிக்கு தினமும் காலை 7.45, 10.50 மற்றும் மாலை 7.20க்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதே போல பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு தினமும் காலை 6.45, மதியம் 3.15 மற்றும் மாலை 4.45க்கு இயக்கப்படுகிறது. சுமார் மூன்று மாத காலம் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு மற்றும் போத்தனூர் வரையிலான அகலரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற பின் ரயில்கள் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...