92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காட்டுமன்னார்கோயில் அருகே கிராமத்திற்குள் புகுந்த முதலை!

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரமேஷ் என்பவரது வீட்டு நாய் தொடர்ந்து குரைத்துள்ளது. அச்சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து

News image
Updated On :10 ஜனவரி 2015, 12:28 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே கிராமத்தில் புகுந்த முதலையை வனத்துறையினர் பிடித்து பாதுகாப்பாக ஏரியில் விட்டனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரமேஷ் என்பவரது வீட்டு நாய் தொடர்ந்து குரைத்துள்ளது. அச்சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்த போது ஊருக்குள் முதலை ஒன்று புகுந்துள்ளதை பார்த்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், சி.சிவக்குமார் மற்றும் பணியாளர்கள் அக்கிராமத்திற்கு உடன் சென்று சுமார் ஐந்தரை அடி நீளமும், 250 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்தனர். பின்னர் அந்த முதலையை சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி நீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.