92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரவுடிசம் மற்றும் திருட்டு குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும்: சிதம்பரம் டிஎஸ்பி சுந்தரவடிவேல்

சிதம்பரம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ஆர்.ராஜாராம் திருநெல்வேலி ரூரல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கமுதி டிஎஸ்பியாக பணியாற்றிய எஸ்.சுந்தரவடிவேல் சிதம்பரம் டிஎஸ்பியாக நியமனம்

News image
Updated On :11 ஜனவரி 2015, 2:19 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் காவல் கோட்டத்தில் ரவுடிசம் மற்றும் திருட்டு குற்றங்கள் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேல் தெரிவித்தார்.

சிதம்பரம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ஆர்.ராஜாராம் திருநெல்வேலி ரூரல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கமுதி டிஎஸ்பியாக பணியாற்றிய எஸ்.சுந்தரவடிவேல் சிதம்பரம் டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய டிஎஸ்பி சுந்தரவடிவேல் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: சிதம்பரம் கோட்டத்தில் குற்றங்களை கண்டுபிடிக்கவும், ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் ஏற்கனவே உள்ள தனிப்படை நெறிமுறைப்படுத்தப்படும். பொதுமக்கள் எந்த நேரத்தில் தங்களது புகார்களை என்னை சந்தித்து தெரிவிக்கலாம் என டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேல் தெரிவித்தார்.                                            

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.