92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் கோயில் குளத்தில் நீரில் மூழ்கி இரு பள்ளி மாணவர்கள் மரணம்

சிதம்பரம் அண்ணாமலைநகர் கோயில் குளத்தில் நீரில் மூழ்கி இரு பள்ளி மாணவர்கள் மரணடைந்தனர். சிதம்பரம் அண்ணாமலைநகர் சிவன்கோயில் தெரு கீழவீதியைச் சேர்ந்த பழனிவேலு. இவர் காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்கில் பம்பு ஆப்பரேட்டராக பணியாற்றுகிறார்.

News image
Updated On :12 ஜனவரி 2015, 3:59 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைநகர் கோயில் குளத்தில் நீரில் மூழ்கி இரு பள்ளி மாணவர்கள் மரணடைந்தனர். சிதம்பரம் அண்ணாமலைநகர் சிவன்கோயில் தெரு கீழவீதியைச் சேர்ந்த பழனிவேலு. இவர் காட்டுமன்னார்கோயில் பெட்ரோல் பங்கில் பம்பு ஆப்பரேட்டராக பணியாற்றுகிறார்.

இவரது மனைவி சித்ரா பல்கலைக்கழகத்தில் தோட்ட வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5-ம் வகுப்பு பயிலும் நித்திஷ் கண்ணன் (11), 2-ம் வகுப்பு பயிலும் பிரதீஷ் (7) என்ற இருமகன்கள் உள்ளனர். இருவரும் அங்குள் ஸ்ரீமீனாட்சி தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இருவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே விளையாடச் சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் காணவில்லை.

இதுகுறித்து அம்மாணவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடி பார்த்துவிட்டு தந்தை பழனிவேலு அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் செய்தார். இந்நிலையில் மாணவர் பிரதீஷ் உடல் அங்குள்ள ஸ்ரீபாசுபதேஸ்வரர் சிவன் கோயில் குளத்தில் திங்கள்கிழமை காலை மிதந்துள்ளது. தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் பிரதீஷ் உடலை கைப்பற்றினர்.

மேலும் தீயணைப்புத்துறையினரை வரவழைத்து பிரதீஷின், அண்ணன் நித்திஷ் கண்ணன் உடலையும் மீட்டனர். இருவரும் குளத்தில் உள்ள நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரது உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.