சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜன.15,16,17 தேதிகளில் சிறப்பு உழவாரப்பணி!
ஈரோடு தலைமையிடமாக கொண்டுள்ள திருத்தொண்டீஸ்வரர் உழவாரப்பணிக்குழுவினர் மாதம் ஒரு கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர். 138வது கோயிலாக சிதம்பரம் ஸ்ரீநடராஜர்


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஈரோடு திருத்தொண்டீஸ்வரர் உழவாரப்பணிக்குழு சார்பில் வருகிற ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் சிறப்பு உழவாரப்பணிகள் (Temple Cleaning Services) நடைபெறுகிறது.
ஈரோடு தலைமையிடமாக கொண்டுள்ள திருத்தொண்டீஸ்வரர் உழவாரப்பணிக்குழுவினர் மாதம் ஒரு கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர். 138வது கோயிலாக சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வருகிற ஜன.15,16,17 ஆகிய 3 தினங்கள் உழவாரப்பணிகள் மேற்கொள்ளவுள்ளனர் என அதன் ஒருங்கிணைப்பாளர் கெளரிசங்கர் தெரிவித்தார்.
ஸ்ரீவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப்பெருமான் கோயில் சிறப்பு உழவாரப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் பக்தர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் முன் கூட்டியே தொடர்பு கொள்ளவும். சிதம்பரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள்: 98429 12767, 97881 11664.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...