பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் புத்தாண்டு, ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து கடந்த 13 நாட்களில் உண்டியல்கள் நிரம்பியதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 53 லட்சத்து 31ஆயிரத்து 630 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 330 கிராமும், வெள்ளி 19 ஆயிரத்து 710 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 311 ம் வரப்பெற்றன. இந்த முறை வெள்ளியை கட்டி, கட்டியாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.