ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஜன.24-இல் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற உள்ளது.அதிமுக சார்பில் சீ.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை ஜனவரி 24-ஆம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற உள்ளது.அதிமுக சார்பில் சீ.வளர்மதி, திமுக சார்பில் என்.ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் வர உள்ள நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை திமுக முக்கியமானதாகக் கருதுகிறது.இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் அல்லது வாக்கு வித்தியாசம் அதிகம் இல்லாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் திமுக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை ஜனவரி 24-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.அதன்பின், ஸ்ரீரங்கபவனம் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். தேர்தல் பிரசார யுக்தி, தேர்தலில் திமுகவினரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...