92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் அருகே முதலை கடித்து இழுத்துச்சென்ற முதியவர் உடல் கண்டெடுப்பு

திங்கள்கிழமை காலை பெராம்பட்டு அருகே பழைய கொள்ளிடத்தில் முதலை ஒன்று, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பிடித்து கடித்து இழுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டதாக அப்பகுதி

News image
Updated On :20 ஜனவரி 2015, 2:50 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே முதலை கடித்து இழுத்துச்சென்ற முதியவர் உடல் செவ்வாய்க்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டது.

திங்கள்கிழமை காலை பெராம்பட்டு அருகே பழைய கொள்ளிடத்தில் முதலை ஒன்று, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பிடித்து கடித்து இழுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு அண்ணாமலைநகர் போலீஸார், தீயணைப்பு மீட்புத்துறையினர், வனத்துறையினர் மற்றும் ஊர்மக்கள் சென்று 2 படகுகள் மூலம் முதலை இழுத்துச் சென்றவரின் உடலை தேடி வந்தனர்.

இந்நிலையில் முதலை கடித்து இழுத்து சென்றவரின் உடல் பழைய கொள்ளிடத்தில் மிதந்த போது செவ்வாய்க்கிழமை மாலை ஊர்மக்களால் கண்டெடுக்கப்பட்டது. முதலை கடித்து இறந்தவர் வெங்காயத்தலமேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர் செல்லதுரை (65) என்பது தெரியவந்துள்ளது. முதலை கடித்ததில் அவரது வலது முழங்கால், வலது தொடை முற்றிலும் சேதமுற்றிருந்தது. செல்லதுரையின் உடல் பிரதே பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.