பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஆயக்குடி பேரூராட்சி முற்றுகை

பழனி அருகே ஆயக்குடியில் இருந்து டிகேஎன் புதூர் செல்லும் வழியில் பெரும்பாறை காலனி உள்ளது.  இங்கு சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.  இந்நிலையில் இப்பகுதியில்

News image
Updated On :20 ஜனவரி 2015, 2:55 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே ஆயக்குடி பெரும்பாறை காலனியில் குடிநீர் வசி செய்து தரக்கோரி ஏராளமான பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பழனி அருகே ஆயக்குடியில் இருந்து டிகேஎன் புதூர் செல்லும் வழியில் பெரும்பாறை காலனி உள்ளது.  இங்கு சுமார் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.  இந்நிலையில் இப்பகுதியில் கடந்த பல நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை என்றும் குடிநீருக்காக ஆண்களும், பெண்களும் குழாய், குழாயாக அலைய வேண்டியுள்ளது என்றும் தெரிவித்து செவ்வாய்க்கிழமை ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமான ஆண்கள் ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் அலுவலகத்தின் உள்ளே செயல் அலுவலர் பாலசுப்ரமணி இருப்பதை அறிந்து அவரை முற்றுகையிட்டனர். காலனி பகுதி மக்கள் தெரிவித்ததாவது:-

காலனி பகுதி ஊரின் வெளியே இருப்பதால் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது.  ஆயக்குடி குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வரதமாநதி அணையில் தண்ணீர் இருந்தும் சரியான முறையில் வழங்க முடியாத நிலையில் பேரூராட்சி நிர்வாகம் உள்ளது என தெரிவித்தனர்.  அவர்கள் குறைகளை கேட்டறிந்த செயல் அலுவலர் பெரும்பாறை காலனி பகுதிக்கு விரைவில் பைப்லைன் மூலமாக குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்வதாகவும், முடியாத பட்சத்தில் அப்பகுதியில் பேரூராட்சி நிதிகள் மூலம் ஆழ்குழாய் போட்டு தண்ணீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களிடம் உறுதி தெரிவித்தார்.  

சம்பவ இடத்துக்கு வந்த ஆயக்குடி அதிமுக பேரூர் செயலாளர் கருப்புச்சாமி காலனிக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வரும் நிலையில் வேண்டுமென்ற சிலர் தூண்டுதலின் பேரில் முற்றுகை போராட்டம் நடைபெற்றுள்ளது என தெரிவித்து அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.