காதலிக்க மறுத்த பிளஸ்-1 மாணவிக்கு கத்திக்குத்து: இளைஞர் மீது வழக்குப்பதிவு
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ராதாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (22). இவர் இதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.


சிதம்பரத்தில் காதலிக்க மறுத்த பிளஸ்-1 மாணவிக்கு கத்தியால் குத்திவிட்டு இளைஞர் ஒருவர் தலைமறைவாகிவிட்டார்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ராதாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (22). இவர் இதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி செல்லும் பேருந்தில் பிரவீன்குமார் தினமும் சென்று வந்துள்ளார். கடந்த சில தினங்கள் முன்பு அந்த மாணவியிடம் தான் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு அம்மாணவி காதலை மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை சிதம்பரத்தில் பள்ளி முடித்துவிட்டு பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த பிளஸ்-1 மாணவியை பிரவின்குமார் மறித்து மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அம்மாணவி எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் பிரவீன்குமார் தன்னிடமிருந்து கத்தியால் மாணவியின் கையில் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார். பின்னர் அம்மாணவி சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து பிரவீன்குமாரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...