திருக்கோயில் நிர்வாகம் மூலம் சரவணப்பொய்கை மற்றும் சண்முகநதி பகுதியில் குழந்தைககள், சிறுவர், ,சிறுமியர் மற்றும் முதியவர்கள் குளிப்பதற்கு சுடுநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் நிர்வாகம் மூலம் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி மலைக்கோயில் மற்றும் குடமுழுக்குநினைவரங்கு வளாகம்,கோசாலா மற்றும் சுற்றுலாபேருந்து நிலையங்கள், பாதவிநாயகர் திருக்கோயில் அருகில் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா அமைத்து காவல்துறை மூலம் பாதுகாப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல்துறை மூலம் பாதயாத்திரையாக பழநிக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி துண்டுபிரசுரங்களும்,ஒளிரும் குச்சிகள்,ஒளிரும் ஸ்டிக்கர் போன்றவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ஒலிபெருக்கியில் பொது அறிவிப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறை மூலம் பக்தர்களின் நலன் கருதி மலைக்கோயில், இடும்பன் கோயில் அருகில் கீழ்வின்ச் நிலையம்,பாதவிநாயகர்கோயில், மீனாட்சிகோயிலிலும், குடமுழுக்குவளாகத்திலும் மருத்துவக்குழு அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.