விராலிமலையில் விஷம் வைத்து நாயை கொன்றவர் கைது
விராலிமலை அருகே சனிக்கிழமை ஆடுகளை கடித்த வேட்டை நாய்களுக்கு விஷம் வைத்த கொன்ற ஒருவரை விராலிமலை போலிஸார் கைது செய்தனர்.


விராலிமலை அருகே சனிக்கிழமை ஆடுகளை கடித்த வேட்டை நாய்களுக்கு விஷம் வைத்த கொன்ற ஒருவரை விராலிமலை போலிஸார் கைது செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள கோடங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகா நாயக்கர். இவர் 4 வேட்டை நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த நாய்கள் அப்பகுதியில் வளர்க்கப்படும் சில ஆடுகளை கடித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை வேட்டை நாய்களில் ஒன்று இறந்து கிடந்துள்ளது, மற்ற 3 நாய்களும் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த முருகா நாயக்கர் இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி விசாரணை மேற்கொண்டதில், அதேபகுதியைச் சேர்ந்த பெ. ரங்கசாமி(40) என்பவர் நாய் கடித்து இறந்து கிடந்த ஒரு ஆட்டின் மீது விஷத்தை தடவிவைத்து நாயை கொன்றது தெரியவந்ததையடுத்து ரங்கசாமி மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...