பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

திருநாரையூர் ஸ்ரீபொல்லாப்பிள்ளையார் கோயிலில் பிரமாண்ட குரு பெயர்ச்சி யாகம்!

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபொல்லாப்பிள்ளையார் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு பிரம்மாண்டமான சிறப்பு யாகம்

News image
Updated On :6 ஜூலை 2015, 11:18 am

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபொல்லாப்பிள்ளையார் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு பிரமாண்டமான சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூலை 5) நடைபெற்றது.

குருப்பெயர்ச்சியும்,  சங்கடஹர சதுர்த்தியும் ஒன்றாக வருவதால் திருநாரையூர் ஸ்ரீ பொல்லாப் பிள்ளையாரை வணங்கினால் ஆண்-பெண் இருபாலாருக்கும் திருமணத்தடை, வியாபாரத்தில் நஷ்டம், எல்லோருக்கும் மனதில் உள்ள கவலைகள் நீங்கும். இதனை முன்னிட்டு  திருநாரையூர் ஸ்ரீ பொல்லாப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று 05-07-2015  குருப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெற்றது.

ஸ்ரீ குருபகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசம் செய்தார். அந்த வைபவத்தைக் கொண்டாடும் விதமாக சிதம்பரம் பாலஜோதிடர் உ.வெங்கடேச தீட்சிதர் தலைமையிலான தில்லைவாழ் அந்தணர்களான நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கொண்ட குழுவினர் மிக பிரம்மாண்டமான யாகத்தை நடத்தினர். முடிவில் ஸ்ரீ குரு பகவானுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். முன்னதாக மதியம் ஸ்ரீ பொல்லாப் பிள்ளையார் அன்னதான ட்ரஸ்ட் சார்பில் 15-வது ஆண்டு தொடக்க அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.