மதுரையில் ஒருவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக 3 பேர் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை சரண் அடைந்தனர்.
மதுரை மேலப்பொன்னாகரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(28). இப்பகுதியில், இளைஞர்களுக்கு இடையே இருபிரிவாக அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 4-ம் தேதி ஆராப்பாளையம் சுகாதார வளாகம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்குமாரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக செல்வக்குமார் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த காளி(27), செல்வம்(24) மற்றும் சங்கர்(23) ஆகிய 3 பேரும் அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவர் திமன்றத்தில் சரண் அடைந்தனர். அதைத் தொடர்ந்து விசாரணை செய்த நீதிபதி சொர்ணகுமார் 15 நாள்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

