கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 சவரன் நகை பறிப்பு

விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On :15 ஜூலை 2015, 1:29 pm

விருதுநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகரில் எ.டி காம்பவுண்ட் புதுத்தெருவைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி சகுந்தலா(32). இவர் புதன்கிழமை பிற்பகலில் கடைவீதிக்குச் சென்றுவிட்டு பழைய அருப்புக்கோட்டை சாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, சகுந்தலாவை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம். இது தொடர்பாக சகுந்தலா கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.