ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ: கோப்புகள் சேதம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் எரிந்து சேதமாகின.

News image
Updated On :16 ஜூலை 2015, 2:11 pm

முத்துகுமார்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கோப்புகள் எரிந்து சேதமாகின.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியும், கல்லூரிக்கான மருத்துவமனையும் தனித்தனி வளாகங்களாக பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் செயல்பட்டு வருகிறது. இதில் கல்லூரி வளாகத்தில் வகுப்பறைகள், நிர்வாகக் கட்டடம்,  ஆய்வகங்கள உள்ளிட்டவை உள்ளன. முதல் தளத்தில் செயல்படும் நிர்வாக அலுவலக கட்டடத்தில் பூட்டி இருந்த ஒரு ஆவணங்கள் அறையில் இருந்து வியாழக்கிழமை பிற்பகலில் கரும்புகை வெளியேறியதாம். இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் அப் பகுதியில் திரண்டனர். அப்போது அறையை திறந்து பார்த்தபோது அதிகளவில் புகை இருந்ததாம்.

தகவலறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் இரா.ஜெகதீஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அறையில் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில் சில கோப்புகள் சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.