தேர்வில் தோல்வி மாணவி தூக்கிட்டு தற்கொலை
விராலிமலை அருகே ப்ளஸ் டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


விராலிமலை அருகே ப்ளஸ் டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விராலிமலை ஒன்றியம் களமாவூர் சீத்தப்பட்டியைச் சேரந்தவர் முத்துகுமார் விவசாயி, இவரது மகள் சங்கவி(17) இவர் விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டு படித்து வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த பிளஸ் டு தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து ஜூன் மாதம் நடைபெற்ற உடனடி துணைத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார், அதிலும் தோல்வி அடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக சங்கவி மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை( ஜூலை, 21) அதிகாலை வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...