பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கேரளாவுக்கு சொகுசுக் காரில் கஞ்சா கடத்தல்: கேரள இளைஞர்கள் 5 பேர் கைது

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு சொகுசுக்காரில் கடத்திய கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களை வடக்கு போலீஸார் கைது செய்தனர். 

News image
Updated On :5 ஜூன் 2015, 3:14 pm

அறிவழகன்

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு சொகுசுக்காரில் கடத்திய கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களை வடக்கு போலீஸார் கைது செய்தனர். 

தமிழகப்பகுதி கம்பத்திலிருந்து, கேரளாவுக்கு கஞ்சா கடத்துவது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேனி மாவட்ட எஸ்பியின் உத்தரவின் பேரில், கம்பம் வடக்கு எஸ்ஐ சுல்தான் பாட்ஷா தலைமையிலான தனிப்படை போலீஸார் தொடர்ந்து நடத்திய கஞ்சா சோதனையில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் கிலோ 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, கேரள மாநிலத்தில் கிலோ 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த கஞ்சா கடத்தலில் கேரளாவைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டு தற்போது ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கம்பம் போலீஸாருக்கு வந்ததாம்.

வெள்ளிக்கிழமை கம்பம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உத்தரவின்பேரில் தனிப்படை எஸ்ஐ சுல்தான் பாட்ஷா தலைமையில் போலீசார்கள்  கம்பம் வாரச்சந்தை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அப்போது அப்பகுதியில் வந்த கேரள பதிவெண் கொண்ட ( கேஎல் 34 சி. 3787) சொகுசுக்காரை தகவலின் பேரில் பேரில் நிறுத்தி விசாரித்தனர். காரில் வந்த இளைஞர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால்,  காரை சோதனை செய்தனர். அதில் இரண்டரை  கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், காரில் வந்த இளைஞர்கள் கோட்டயத்தைச் சேர்ந்த முஹமது ரஷீத் மகன் பிவின்சாரஷீத்(21), ஜோஸ் மகன் ஜோதிஸ்ஜோசப் (17), ஜோசப் மகன் ரோஷன்(17), சிரியாக மகன் ஸ்ரீஜித்(26), ராஜேந்திரன் மகன் ராகுல் ராஜேந்திரன்(21) என தெரிய வந்தது. இவர்கள் கம்பத்தில் கஞ்சாவை வாங்கி கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்கள் கஞ்சாவுடன் சொகுசுக்காரையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.