பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தூத்துக்குடி புதிய அனல் மின் நிலைய 2 ஆவது அலகில் இம்மாத இறுதியில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி

தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் உள்ள 2 ஆவது அலகில் ஜூன் மாத இறுதியில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2015, 2:15 pm

இன்பராஜ்

தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் உள்ள 2 ஆவது அலகில் ஜூன் மாத இறுதியில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ல புதிய அனல் மின் நிலைய தலைமை செயல் அலுவலர் சத்தியநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இணைந்து தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அலகுகள் மூலம் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் தூத்துக்குடி துறைமுகம் அருகே அமைக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி பகல் 12.30 மணி முதல் புதிய அனல் மின்நிலைய முதல் அலகில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து 72 மணி நேரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் மின் உற்பத்தி பணிகள் தொடர்ந்து வெற்றி பெறப்பட்டுள்ளது.

இதற்கிடையே,  இரண்டாவது அலகிலும் மின் உற்பத்தியை தொடங்கும் வகையில் பணிகளை விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த அலகில் ஜூன் மாத இறுதிக்குள் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.