வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விமான நிலையத்தில் 71 மி.மீ. மழை

திருச்சி மாநகரில் விமான நிலையப் பகுதியில் அதிகபட்சமாக 71 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On :7 ஜூன் 2015, 3:52 am

திருச்சி மாநகரில் விமான நிலையப் பகுதியில் அதிகபட்சமாக 71 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும், திருச்சி மாவட்டத்திலும், மாநகர்ப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் வெயிலின் அளவு அதிகமாக இருந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டங்கள் அதிகம் கொண்டு காணப்பட்டிருந்தது.

மாலை 6 மணிக்கு மேல் இடி- மின்னலுடன் பெய்யத் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

இதனால் இரு சக்கர வாகனங்களில்சென்றோர் அவதிக்குள்ளாகினர். புறநகரிலும் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விமான நிலையப் பகுதியில் 71 மி.மீ. மழை பதிவாகியது. குறைந்த அளவாக வாய்த்தலை அணைக்கட்டில் 0.70 மி.மீ. மழை பெய்துள்ளது.

மாவட்டத்தின் மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

திருச்சி விமான நிலையம் - 71 மி.மீ, பொன்மலை - 52, திருச்சி ஜங்ஷன் - 44,  பொன்னணியாறு அணை -41.80, லால்குடி -30.20, நவலூர் குட்டப்பட்டு - 24, துவாக்குடி நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம் - 20, மருங்காபுரி - 10.20, கோவில்பட்டி - 8.40, கல்லக்குடி - 6.40, மணப்பாறை - 5,  திருச்சி நகரம் - 4.20, நந்தியாற்றுத்தலைப்பு - 1.20, வாய்த்தலை அணைக்கட்டு - 0.70 மி.மீ.

மாவட்டத்தில் மொத்தமாக 319 மி.மீ. மழையும், சராசரியாக 12.70 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.