அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை தற்கொலை முயற்சி

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை  திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :15 ஜூன் 2015, 8:57 am

முத்துகுமார்

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை  திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார்.

புளியங்குடியைச் சேர்ந்த பிச்சையா மனைவி ராஜேஸ்வரி (34), தனது குழந்தைகளான தவகீதா (10), ராஜபார்கவி (7) ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தமக்கு இடமாறுதல் வழங்காவிட்டால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அழத்தொடங்கியவரை, பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் தடுத்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து பூச்சிக்கொல்லி மருந்து கைப்பற்றப்பட்டது.

பின்னர் அவர் அளித்த மனு:வாசுதேவநல்லூர் அருகே டி.ராமநாதபுரத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் தாற்காலிகமாகப் பணியாற்றி வந்த எனக்கு கடந்த 9-1-2009 ஆம் தேதி முதல் நிரந்தர இடைநிலை ஆசிரியராகப் பணியாற்ற பணிநியமன உத்தரவு கிடைத்தது. அதன்பின்பு எனக்கு பள்ளியை நிர்வகிக்கும் ஒருவரால் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.

தகாத வார்த்தைகளால்பேசுவது தொடங்கி கட்டாயப்படுத்தி விடுமுறை எடுக்க வைப்பவது வரை சிரமங்கள் ஏற்பட்டன. பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி அவதூறு பரப்பினர். வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்காமல் தடுக்கிறார்கள். இதுகுறித்து கல்வித் துறையினரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. எனக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.