கங்கைகொண்டான் அருகே கார்-லாரி மோதல்: பெண் உள்பட 2 பேர் சாவு
கங்கைகொண்டான் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் செவ்வாய்க்கிழமை இறந்தனர்.


கங்கைகொண்டான் அருகே லாரி-கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் செவ்வாய்க்கிழமை இறந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள மேலநொச்சிக்குளம் வடக்குத்தெருவைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் தனராஜ் (53).கருவேலம்பாடு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். திருப்பூரில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் தனராஜ், அவரது மனைவி வசந்தி (42), உறவினர்களான பேய்க்குளத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி பாலஇசக்கி (47), பூவேந்திரன் (50), அவரது மனைவி சாந்தா (47) ஆகியோர் சென்றனர். உடையாண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (40) காரை ஓட்டினார்.
திருப்பூரில் இருந்து திங்கள்கிழமை இரவு ஊருக்கு புறப்பட்டனர். கங்கைகொண்டான் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது பழுதானது. இதையடுத்து சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தனராஜூம், பாலஇசக்கியும் இறங்கி நின்று கொண்டிருந்தனராம். அப்போது மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரியும், சாலையோரம் நின்றிருந்த காரும் மோதின.
இதில் தனராஜ், பாலஇசக்கி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வசந்தி, பூவேந்திரன், சாந்தா, முருகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும் அப்பகுதி மக்களும், கங்கைகொண்டான் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரான வீராசாமியை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...