108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி பங்குனி உத்திரத் திருவிழா:  மார்ச்.28ல் கொடியேற்றம்

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் வரும் மார்ச்.28ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல்.2 ம் தேதி வெள்ளித்

News image
Updated On :14 மார்ச் 2015, 1:14 pm

என்.​ அங்​கு​பாபு

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் வரும் மார்ச்.28ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல்.2 ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், ஏப்ரல்.3 ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

பழனியில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பு மிக்கவையாகும். தைப்பூசம் கடந்த மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் விரைவில் பங்குனி உத்திரத் திருவிழா விரைவில் துவங்கவுள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவின் போது கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இலட்சக்கணக்கான முருகபக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி தீர்த்தம் தரித்து பழனிக்கு பாதயாத்திரை வருகின்றனர். இந்த கொடுமுடி தீர்த்தம் பழனி நவபாஷாண மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

கோடை காலமான பங்குனி மாதத்தில் மூலவரை குளிர்ச்சி செய்யும் விதமாக நவபாஷாண சிலைக்கு நடைபெறும் இந்த அபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும்.  பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் மார்ச்.28ம் தேதி திருஆவினன்குடியில் காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  10 நாட்கள் நடைபெறவுள்ள விழா நாட்களில் தினமும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளியானை, தங்கக்குதிரை போன்ற பல்வேறு வாகனங்களில் கிரிவீதி உலா எழுந்தருள்கின்றனர். வரும் ஏப்ரல். 2ம்  தேதியன்று திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிரதத்தில் அருள்மிகு வள்ளி, தேவசேனை சமேதர் முத்துக்குமாரசாமி கிரிவீதி உலாவும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் தேரடியில் வரும் ஏப்ரல்.3ம் தேதியன்று மாலை நடைபெறுகிறது. ஏப்ரல்.6ம் தேதி சுவாமி தங்கக்குதிரையில் புறப்பாடு செய்த பின்னர் இரவு திருக்கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் பழனி அடிவாரம் கிரிவீதி குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி இன்னிசை, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா மற்றும் திருக்கோயில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.