தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லை அருகே லாரி ஓட்டுநர் கொலை

சுத்தமல்லி அருகேயுள்ள சங்கரன்திரடு கிராமத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தலைத்துண்டித்த நிலையில் சனிக்கிழமை காலையில்

News image
Updated On :14 மார்ச் 2015, 9:22 am

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே லாரி ஓட்டுநர் தலைத்துண்டித்து சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.

சுத்தமல்லி அருகேயுள்ள சங்கரன்திரடு கிராமத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் தலைத்துண்டித்த நிலையில் சனிக்கிழமை காலையில் கிடந்தது. சடலத்தின் அருகே பைக்கும் கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் சுத்தமல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் சடலமாகக் கிடந்தவர், பார்வதியாபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் இளையராஜா (35) என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநரான இவர், வீட்டில் இருந்து வெள்ளிக்கிழமை மாலையில் பைக்கில் வெளியே சென்றாராம். பின்னர் வீடுதிரும்பவில்லையாம். வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் அவரை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சங்கன்திரடு, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.