நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தொடங்கி தூக்குத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா கடந்த 11ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
அதைதொடர்ந்து 32 உயரம் கொண்ட தூக்குத்தேர் அமைக்கப்பட்டு, கடந்த 4 நாட்களாக அருகில் உள்ள கணபதிபாளையம், செல்லிபாளையம், தொட்டிப்பட்டி, ஓடக்காட்டூர், குஞ்சாயூர், வடுக்கப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு கிராம சுற்று நடைபெற்றது.தூக்குத்தேர் உள்ளூர் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது மாலை 5 மணியளவில் திடீரென தூக்குத்தேர் மேல் பகுதி முறிந்து விழுந்தது. இதில் கணபாதிபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்(42) உள்ளிட்ட 4 பேர் சிக்கிக்கொண்டனர். படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் வழியிலேயே ரவிச்சந்திரன் உயரிழந்தார். ஜெகதீசன், கார்த்திக், ரமேஷ் ஆகிய 3 பேரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேரில் சிக்கி உயிரிழந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவபர்களை நாமக்கல் எம்எல்ஏ கேபிபி.பாஸ்கர், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இவ்விபத்து குறித்து மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

