கொல்லிமலையில் கார் பள்ளத்தில் கவிழந்ததில் சென்னையை சேர்ந்த 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை ஆவடியை சேர்ந்தவர் கண்ணதாசன்(57). இவர் படை வீரர்கள்களுக்கு சீருடை தைக்கும் வேலை செய்துவந்தார். இவரது மனைவி ஸ்ரீலதா(48), மகள் வைஷ்ணவி(19), மகன் ஆனந்த் விஷ்ணு(16), பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயகுமார்(60), அவரது மனைவி் ராஜலட்சுமி(47) ஆகியோர் காரில் கொல்லிமலை அரியூர்நாடு பெரியசாமி கோயிலுக்கு சனிக்கிழமை மாலை சென்றுவிட்டு, மாலை 6 மணி அளவில் கீழே இறங்கியுள்ளனர். காரை ஆவடியை சித்தார்த்(32) ஓட்டியுள்ளார்.
அங்கிருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கண்ணதாசன், ஸ்ரீலதா, வைஷ்ணவி, விஜயகுமார் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆனந்த் விஷ்ணு, ராஜலட்சுமி, சித்தார்த் ஆகிய 3 பேரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கொல்லிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

